சென்னை: மனுஷி படத்துக்கு சென்சார் சான்று மறுக்கப்பட்டதை எதிர்த்து இயக்குநர் வெற்றிமாறன் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. மனுஷி படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் தருவது குறித்து பரிசீலிக்கப்படும். சென்சார் போர்டு ஆட்சேபங்களை எதிர்த்து தயாரிப்பாளர் வழக்கு தொடரலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.