மணிப்பூரில் மீண்டும் வன்முறை; தெளபால் மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர்: மணிப்பூரின் தெளபால் மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு, மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் கண்டனம், தாக்குதல் நடத்தியவர்கள் விரைவில் சட்டப்படி தண்டிக்கப்படுவர் எனவும் உறுதி அளித்துள்ளார். மணிப்பூரில் குக்கி பழங்குடியினர் மற்றும் மெய்தி இனத்திற்கும் கடந்த மே மாதம் முதலே மோதல் போக்கு ஏற்பட்டு வந்த நிலையில் வன்முறை வெடித்தது.

இதில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், குக்கி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ கூடுதல் அதிர்ச்சியை கிளப்பியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

மணிப்பூரில் நடந்த வன்முறையில் உயிரிழந்த குக்கி சமூகத்தைச் சேர்ந்த 87 பேரின் சடலங்கள் சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டன. இந்நிலையில் மணிப்பூரின் தௌபால் மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் விரைவில் சட்டப்படி தண்டிக்கப்படுவர் எனவும் உறுதியளித்துள்ளது.

The post மணிப்பூரில் மீண்டும் வன்முறை; தெளபால் மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு.! appeared first on Dinakaran.

Related Stories: