மணிப்பூர் விவகாரத்தில் ஒன்றிய பாஜ அரசின் அலட்சியம் சென்னையில் வரும் 28ம் தேதி கண்டன கூட்டம் நடைபெறும்: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே மாதம் 3ம் தேதி தொடங்கிய கலவரத்தை 50 நாட்களாக கட்டுப்படுத்த முடியாமல் 120க்கும் மேற்பட்டவர்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். ஒரு லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். மணிப்பூருக்கு சென்று மக்களுக்கு ஆறுதல் கூற முடியாத பிரதமர் மோடி, அமெரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். யோகா நிகழ்ச்சியில் காட்டுகிற அக்கறையை மணிப்பூர் மக்களுக்காக அவர் காட்டவில்லை. மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. எனவே, அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, மீண்டும் அமைதியை நிலைநாட்ட அரசமைப்புச் சட்டம் 356-வது பிரிவை பயன்படுத்தி மணிப்பூர் மாநிலத்தை குடியரசு தலைவர் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தியும், ஒன்றிய பாஜ அரசின் அலட்சியப் போக்கையும் கண்டித்தும், தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை சார்பில் எனது தலைமையில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் வருகிற 28ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் கண்டன கூட்டம் நடைபெற உள்ளது.

The post மணிப்பூர் விவகாரத்தில் ஒன்றிய பாஜ அரசின் அலட்சியம் சென்னையில் வரும் 28ம் தேதி கண்டன கூட்டம் நடைபெறும்: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: