மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மதுரை பல்கலை பேராசிரியர் கைது

திருப்பரங்குன்ற: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து கருப்பையா (59). இவர், இதே துறையில் படிக்கும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கடந்த ஏப். 11ம் தேதி பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் அளித்தனர். த விசாரணையில் முடிவு எட்டப்படாததால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் மதுரை சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை தொடர்ந்து டிஐஜி பொன்னி உத்தரவின் பேரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பேராசிரியர் கருப்பையா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

The post மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மதுரை பல்கலை பேராசிரியர் கைது appeared first on Dinakaran.

Related Stories: