மத்தியப்பிரதேசத்தில் நர்மதா ஆற்றை தனியாக கடந்த மூதாட்டி: நர்மதா தேவியாக கருதி மூதாட்டியை வழிபடும் பக்தர்கள்

மத்தியபிரதேசம்: மத்திய பிரதேசத்தில் நர்மதா ஆற்றை தனியாக கடந்த மூதாட்டியை தெய்வமாக கருதி ஆயிரக்கணக்கானோர் வழிபட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் மூன்று நாட்களுக்கு முன்பு நர்மதா ஆற்றில் வயதான பெண் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. நர்மதா ஆற்றில் ஆழமற்ற நீரில் மூதாட்டி நடந்து சென்ற நிலையில் இதை அதிசயம் என்று நம்பி அந்த மூதாட்டியை பார்க்க நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.

அந்த பெண் நார்மதா தேவி என்ற செய்தியும் தீயாக பரவியது. நர்மதா தேவியின் வடிவத்தில் அந்த மூதாட்டி தண்ணீரில் நடப்பதாக வீடியோவில் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த வீடியோ சுற்றியுள்ள கிராமங்களில் பரவியதால் நர்மதா தேவி என நினைத்து அந்த மூதாட்டியை தரிசனம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது. நர்மதா தேவியின் தரிசம் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் மூதாட்டியின் வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர்.

The post மத்தியப்பிரதேசத்தில் நர்மதா ஆற்றை தனியாக கடந்த மூதாட்டி: நர்மதா தேவியாக கருதி மூதாட்டியை வழிபடும் பக்தர்கள் appeared first on Dinakaran.

Related Stories: