மக்களவைத் தேர்தல் எதிரொலி.. கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புக்கு 3,800 காவல்துறையினர் குவிப்பு!!

கடலூர்: மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதி உள்ளது. இதில் 6 சட்டமன்ற தொகுதி கடலூர் நாடாளுமன்றத்திற்கும், 3 சட்டமன்ற தொகுதி சிதம்பரம் நாடாளுமன்றத்திலும் உள்ளது. மொத்தமாக கடலூர் மாவட்டத்தில் 21,40,112 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண் வாக்காளர்கள் 10,86,073 அதிகம் உள்ளனர்.

இந்நிலையில், 19 வேட்பாளர்கள் கடலூர் நாடாளுமன்றத்தில் போட்டியிடுகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ், தேமுதிக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. கடலூரில் 2,302 வாக்குச்சாவடி உள்ளது. இதில் 192 வாக்குச்சாவடி பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், கடலூர் மாவட்ட போலீசார் மொத்தம் 3,800 போலீஸ் மற்றும் 5 கம்பெனி துணை ராணுவப்படையும், 205 ரோந்து வாகனங்களும் பாதுகாப்பு பணிக்கு தாயார் நிலையில் உள்ளது.

குறிப்பாக வாக்குச்சாவடியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை கண்காணிக்கு பொருட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம் திட்டமிட்டுள்ளார். மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிக்கவே பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி காவல்துறை செய்து வருகிறது. மேலும், இதில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், துணை ராணுவத்தினரும் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

The post மக்களவைத் தேர்தல் எதிரொலி.. கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புக்கு 3,800 காவல்துறையினர் குவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: