மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விக்கி, ஜொமாடோ உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டம்!

மும்பை : மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விக்கி, ஜொமாடோ உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுபான கடைகளுக்கு சென்று காத்திருந்து மதுவை வாங்காமல் வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்யலாம். அவ்வாறு ஆர்டர் செய்யும் மதுவை சில நிமிடங்களில் ஹோம் டெலிவரி செய்து வருகிறது. இது கொல்கத்தாவில் நடைமுறையில் உள்ளது. மேலும் குறைந்த வயதுக்குட்பட்ட நபர்களுக்கு விநியோகம், கலப்படம், அதிகப்படியான நுகர்வு போன்ற மதுபான விநியோகத்துடன் தொடர்புடைய பெரும்பாலான அச்சங்கள் நிவர்த்தி செய்தது.

இந்த நிலையில் பீர், ஒயின் உள்ளிட்ட ஆல்கஹால் குறைவாக சேர்க்கப்பட்ட மதுபான வகைகளை ஆன்லைன் ஆர்டர் மூலம் ஹோம் டெலிவரி செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விக்கி, ஜொமாடோ, பிக் பாஸ்கேட் உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா, மேற்கு வங்கத்தில் மதுபானங்களை ஹோம் டெலிவரிக்கு அனுமதி உள்ள நிலையில், கர்நாடகா, ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அனுமதி பெற்று இதனை நடைமுறைப்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

 

The post மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விக்கி, ஜொமாடோ உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டம்! appeared first on Dinakaran.

Related Stories: