குஜிலியம்பாறை அருகே திருவிழாவில் எருது விடும் போட்டி

*300 காளைகள் பங்கேற்பு

குஜிலியம்பாறை : திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே காட்டமநாயக்கன்பட்டியில் வீரஜக்கா தேவி கோயில் திருவிழா கடந்த ஜூன் 14ம் தேதி தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. திருவிழா கடைசி நாளான நேற்று எருது விடும் விழா நடந்தது. திண்டுக்கல், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் கோயில் அமைந்துள்ள இடத்திற்கு கொண்டு வரப்பட்டன.

காளைகளுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்த பின், காளைகளை கோயிலில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ள திறந்தவெளி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து போட்டி துவங்கியது. ஒவ்வொரு காளைகளையும் விரட்டி கொண்டு கோயிலை நோக்கி ஓடி வந்தனர். இதில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாவட்டம் கோப்பாநாயக்கர் மந்தைஅய்யம்பாளையத்தை சேர்ந்த காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காளையை பராமரிப்பவருக்கு எலுமிச்சம்பழம், மஞ்சள்பொடி பரிசாக வழங்கப்பட்டது.பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் நடந்தது. இதில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post குஜிலியம்பாறை அருகே திருவிழாவில் எருது விடும் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: