இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் இந்த சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரும் வகையில், காவல்துறை தலைவர் பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றும், பாதிக்கப்பட்ட மாணவிகள் அவர்கள் பெற்றோரை கலந்து அவர்களின் நலம் காத்திட சமூக நலத்துறை செயலாளர் ஜெய்ஸ்ரீ முரளிதரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
அதன்படி இந்த குழுவானது இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பவம் குறித்து இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பிறகு சம்பவம் நடந்த இடங்களை ஆய்வு செய்ய உள்ளனர். இந்த ஆய்வு கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், சமூக பாதுகாப்பு ஆணையர், கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
The post கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவி வன்கொடுமை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு ஆலோசனை..!! appeared first on Dinakaran.