கர்நாடக தேர்தல் முடிவுகள் பாஜகவை வெறுத்ததையே காட்டுகிறது – திருமாவளவன் பேச்சு..!!

மதுரை: பாஜகவின் பிரிவினைவாத அரசியலை மக்கள் வெறுத்து விட்டார்கள் என்பதற்கு கர்நாடக தேர்தல் முடிவுகளே சான்று என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை, பழங்காநத்தம் பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய விசிக தலைவர் தொல்திருமவளவன் பாஜகவை மற்ற கட்சிகள் போல சராசரியான கட்சியாக மக்கள் பார்க்க கூடாது என்று கூறினார்.

பாஜக என்பது ஆர்.எஸ்.எஸ்.கொள்கைகளை நடைமுறை படுத்தும் கட்சி என்று கூறிய அவர், இந்துத்துவாவை எதிர்த்தால் இந்துக்களை எதிர்ப்பதாக திசை திரும்புவார்கள் என்று கூறினார். இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். பாஜக கூட்டு ஆட்சியின் சுரண்டல் வெறும் பொருளியல் சுரண்டல் மட்டுமல்ல ஜாதி, மதத்தின் பெயரால் பிரிவினை வாதத்தின் சுரண்டல் என்று கூறினார். பாஜகவின் இந்த பிரிவினை வாத அரசியலை மக்கள் வெறுத்துவிட்டார்கள் என்பதையே கர்நாடக தேர்தல் முடிவுகள் சான்றளிப்பதாக கூறினார்.

மாநாட்டில் உரையாற்றிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கர்நாடகாவில் தேர்தலில் வீழ்த்தப்பட்ட பாஜகவை அரசியலிலிருந்தும் அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த அவர் அதற்கு ஆர்.எஸ்.எஸ்யை அப்புறப்படுத்த வேண்டும் என்றார். பாஜகவை போல ஆயிரம் கட்சிகளை ஆர்.எஸ்.எஸ் ஆல் உருவாக்க முடியும் என்று கூறினார். அகில இந்திய அளவில் பாசிச பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவது இன்றியமையாதது என்று திருமாவளவன் வலியுறுத்தினார். எவ்வளவு கருத்தியல் முரண்பாடுகள் இருந்தாலும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை புள்ளியில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

The post கர்நாடக தேர்தல் முடிவுகள் பாஜகவை வெறுத்ததையே காட்டுகிறது – திருமாவளவன் பேச்சு..!! appeared first on Dinakaran.

Related Stories: