கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியா? ஆளுநர் தமிழிசை பேட்டி

நெல்லை: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியா? என்ற கேள்விக்கு ஆளுநர் தமிழிசை பதிலளித்து உள்ளார். நெல்லை மாவட்டம் அரிகேசவநல்லூரில் உள்ள ஹரிகேசநாதர் கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி: அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே சமூக நீதி. பல்வேறு மதங்கள் உள்ள நாட்டில் பொது சிவில் சட்டம் சமூகநீதி தேவை என்பதற்காகவே கொண்டு வரப்படுகிறது. பொது சிவில் சட்டம் ஒரு சமூகத்திற்கு எதிரான சட்டம் என ஒரு சிலரால் தோற்றுவிக்கப்படுகிறது.

பொது சிவில் சட்டத்திலிருந்து மலைவாழ் மக்களுக்கு சில விலக்குகள் அளிக்கப்படலாம். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நான் போட்டியிடுவதாக சமூக வலைத்தளங்களில்தான் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கிறது. கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அதை பொறுத்து மேகதாது அணை பிரச்னை குறித்து இங்கு உள்ளவர்கள் பேசுகிறார்கள் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் என்ற பொறுப்பில் இருக்கும் எனக்கு சிறப்பு அதிகாரங்கள் உள்ளது. அதற்கு உட்பட்டு நான் செயல்படுகிறேன். முன்னாள் முதலமைச்சர் வைத்தியலிங்கம் சில குற்றச்சாட்டுகளை கூறுகிறார் அவர் கூறுவது போல எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, காஸ் விலை உயர்வு தொடர்பாக புதுச்சேரியில் அமைச்சர் ஒருவர் முற்றுகையிடப்படுகிறாரே என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, ‘புதுச்சேரியில் காஸ்க்கு ரூ.300 மானியமாக வழங்கப்படுகிறது. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. முற்றுகை சம்பவம் எது போன்ற சூழலில் நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை’ என்று தெரிவித்தார்.

The post கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியா? ஆளுநர் தமிழிசை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: