திமுகவின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றம்: மதுரையில் கனிமொழி பேட்டி

மதுரை: திமுகவின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளது என மதுரையில் கனிமொழி எம்.பி.தெரிவித்துள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்பு கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கனிமொழி; அனைத்து தரப்பு மக்களை சந்தித்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டியவை குறித்து கேட்டோம். ஜி.எஸ்.டியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு, குறு தொழில் முனைவோர் கருத்து தெரிவித்துள்ளனர். திமுகவின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை.

தென்மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் நிதி உள்ளிட்டவை குறைந்து கொண்டே வருகிறது. கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி குறைந்து கொண்டே வருகிறது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ஒரு பைசா கூட வரவில்லை. சென்னை, தென்மாவட்ட வெள்ள பாதிப்பை மூத்த ஒன்றிய அமைச்சர்கள் ஆய்வு செய்தும் நிதி தரவில்லை. ரயில்வே உள்ளிட்ட திட்டங்களுக்கு தென் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்றும் கூறினார்.

The post திமுகவின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றம்: மதுரையில் கனிமொழி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: