கால்மி கபாப்

தேவையான பொருட்கள் :

சிக்கன் லெக் பீஸ் – அரை கிலோ
தயிர் – 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1/2 மேஜைக் கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
முந்திரி பொடி – 4 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
மிளகு – 1/4 தேக்கரண்டி
ஃபிரஷ் கிரீம் – 1/4 கப்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

சிக்கன் லெக் பீஸை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பௌலில் தயிர் எடுத்து கொள்ளவும்.அதில் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் மற்றும் முந்திரி பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.அத்துடன் ஏலக்காய் பொடி, மிளகு தூள், சீரகம், கிரீம் ஆகிய வற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.எலும்பு நீக்கப்பட்ட சிக்கனை இந்த மசாலா கலவையில் தொட்டு எடுத்து 8 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.அடுப்பில் கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். மசாலா தடவி வைத்த சிக்கனை எடுத்து எண்ணெயில் போட்டு 10 -12 நிமிடங்கள் வரை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அருமையான கால்மி கபாப் ரெடி. புதினா சட்னி, வெங்காயம் ஆகிய வற்றை தொட்டு சூடாக சாப்பிட ருசியாக இருக்கும்.

The post கால்மி கபாப் appeared first on Dinakaran.