உளுத்தம் பருப்பு துவையல்

தேவையானவை:

கறுப்பு உளுத்தம் பருப்பு – 1 கப்,
காய்ந்த மிளகாய் – 5,
பெருங்காயம் – 1 துண்டு,
புளி, உப்பு – தேவைக்கு.

தாளிக்க

எண்ணெய்,
கடுகு, கறிவேப்பிலை – தேவைக்கேற்ப.

செய்முறை:

சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், பெருங்காயம் வறுத்து கொண்டு, உளுத்தம் பருப்பை வாசனை வரும் வரை வறுத்து எடுத்து, உப்பு, புளி, பெருங்காயம், மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

The post உளுத்தம் பருப்பு துவையல் appeared first on Dinakaran.