பீர்க்கங்காய் துவையல்

தேவையானவை:

இளம் பீர்க்கங்காய் – 2,
துவரம் பருப்பு,
கடலைப்பருப்பு,
உளுத்தம் பருப்பு,
தேங்காய் துருவல் – தலா 1 டேபிள் ஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 4,
புளி, உப்பு, பெருங்காயம்,
எண்ணெய் – தேவைக்கு.

தாளிக்க

தேங்காய் எண்ணெய்,
கடுகு, உளுத்தம் பருப்பு – சிறிது.

செய்முறை:

பீர்க்கங்காயை அலம்பி தோல் சீவி துண்டுகள் போடவும். எண்ணெயில் காயம், பருப்பு வகைகள், மிளகாய் வற்றல், தேங்காய் துருவல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் பீர்க்கங்காய் துண்டுகளை ேசர்த்து சிவக்க வறுத்துக் கொண்டு, ஆறியவுடன் உப்பு, புளி, பருப்புகளை முதலில் 2 சுற்று விட்டு பின் தேங்காய் சேர்த்து அரைத்து எடுக்கவும். சிலர் தோலையும் வறுத்து சேர்த்து அரைப்பார். (காய் கசக்கிறதா? என்பதை கிள்ளி வாயில் போட்டு சுவைத்து பார்த்து வாங்கவும்). தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.

The post பீர்க்கங்காய் துவையல் appeared first on Dinakaran.