பீட்ரூட் குழம்பு

தேவையான பொருட்கள்

1 பெரிய அளவு – பீட்ரூட்
1 முழு பூண்டு பற்கள் – உரித்தது
1.5டீஸ்பூன் – சாம்பார்த்தூள்
தேவையான அளவு – உப்பு

தாளிக்க

1 டீஸ்பூன் – எண்ணெய்
1 டீஸ்பூன் – கடுகு
சிறிது கறிவேப்பிலை

அரைத்துக்கொள்ள

1/4 கப் – தேங்காய்த் துருவல்
1 ஸ்பூன் கசகசா
2 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை
2 முழு முந்திரிப் பருப்பு
சிறிதளவு – கொத்தமல்லித்தழை.

செய்முறை

ஒரு பெரிய அளவு பீட்ரூட்டை பொடியாக அறிந்து கொள்ளவும். ஒரு சிறிய குக்கரில் எண்ணெய் சேர்த்து கடுகு பூண்டு கருவேப்பிலை தாளித்துக் கொள்ளவும். பிறகு அதில் பீட்ரூட்டை சேர்த்து இரண்டு அல்லது மூன்று நிமிடம் வதக்கவும். வதங்கிய பின் அதில் சாம்பார்த் தூள் உப்பு சேர்த்து மிதக்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி இரண்டு அல்லது மூன்று சவுண்ட் விட்டு வேக விடவும். கால் கப் தேங்காய்த்துருவல் இரண்டு அல்லது மூன்று முந்திரிப் பருப்பு ஒரு டீஸ்பூன் கசகசா 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை இவை எடுத்து மிக்ஸியில் தண்ணீர் சிறிது சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும். அதன் பிறகு குக்கர் ஆவி அடங்கிய பின் வெந்த காயில், அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொத்தமல்லித் தழை சேர்த்து அலங்கரிக்கவும். சுவையான பீட்ரூட் குழம்பு மிகவும் எளிதாக விரைவில் செய்துவிடலாம் இது சப்பாத்தி பூரிக்கு தொட்டுக் கொள்ளலாம். சாதத்தில் போட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம்.

 

The post பீட்ரூட் குழம்பு appeared first on Dinakaran.