பீட்ரூட் ரைஸ்

தேவையான பொருட்கள்

1 கப் – வேகவைத்த சாதம்
2 – பீட்ரூட்
1/2 – ஸ்பூன் கடுகு
1/2 – ஸ்பூன் உளுந்தம் பருப்பு
1/2 ஸ்பூன் – கடலைப் பருப்பு
தேவையான அளவு உப்பு
3 வரமிளகாய்
2 வெங்காயம்.

செய்முறை

முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கிய பின் வரமிளகாயும் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு உப்பு சேர்த்து நறுக்கிய பீட்ரூட்டைச் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். இறக்கும் பொழுது ஒரு ஸ்பூன் நெய் ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு இறக்கவும். இதை எடுத்து வேகவைத்து சாதத்துடன் கலந்தால் பீட்ரூட்ரைஸ் ரெடி

 

The post பீட்ரூட் ரைஸ் appeared first on Dinakaran.