பீட்ரூட் ரசம்

தேவையான பொருட்கள்

1 பீட்ரூட்
1 தக்காளி
1 டீஸ்பூன் சீரகம்
1/2 டீஸ்பூன் மிளகு
2 பச்சை மிளகாய்
உப்பு தேவையான அளவு
தாளிக்க
1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
1/4 டீஸ்பூன் கடுகு
கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை

முதலில் பீட்ரூட்டை தோல் உரித்து பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும். அதன்பிறகு, தக்காளி, பீட்ரூட் துண்டுகள், சீரகம், மிளகு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இவை அனைத்தையும் ஒரு வாணலியில் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து உப்பு கலந்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு, வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் தாளித்து ரசத்தில் சேர்க்கவும். அவ்வளவுதான். தயாரான பீட்ரூட் ரசத்தில் பொடியாக நறுக்கிய மல்லி இலையை தூவினால் கூடுதல் சுவையாகவும் இருக்கும்.

 

The post பீட்ரூட் ரசம் appeared first on Dinakaran.