கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தனியார் மருந்தகத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருந்தக உரிமையாளர் சேட்டு உள்ளிட்ட 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர். கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என தெரிந்துகொள்ள ரூ.1,500 வசூல் செய்துள்ளனர். கருவில் இருப்பது பெண் சிசு என தெரிந்தால் கருக்கலைப்பு செய்ய ரூ.1 லட்சம் வரை வசூல் செய்ததும் அம்பலமானது.
The post கள்ளக்குறிச்சி அருகே தனியார் மருந்தகத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு: 4 பேர் கைது appeared first on Dinakaran.