14 மக்களவை தொகுதிகளில் 13ஐ இந்தியா கூட்டணி வெல்லும்: ஜார்கண்ட் முதல்வர் உறுதி

மெதினிநகர்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 14 மக்களவை தொகுதிகளில் 13 தொகுதியை இந்தியா கூட்டணி வெல்லும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்தார். ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்சா (ஜேஎம்எம்) ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தம் 14 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சோரன், “இந்தியா கூட்டணி மக்களவைத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் 13ல் வெற்றி பெறுவோம். நாடாளுமன்ற தேர்தலில் ஜேஎம்எம் இந்தியா கூட்டணிக்கு பக்கபலமாக உறுதியாக நிற்கிறது,” என்று தெரிவித்தார்.

The post 14 மக்களவை தொகுதிகளில் 13ஐ இந்தியா கூட்டணி வெல்லும்: ஜார்கண்ட் முதல்வர் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: