இத்தாலியன் ஓபனில் அன்னா முதல்முறையாக விளையாடுகிறார். கூடவே டபிள்யூடிஏ போட்டி ஒன்றில் 3வது சுற்றுக்கு முன்னேறுவதும் இதுவே முதல் முறையாகும். மற்றொரு 2வது சுற்று ஆட்டத்தில் பெலாரசின் விக்டோரியா அசரென்கா(33வது வயது, 17வது ரேங்க்), அமெரிக்காவின் ஸ்ேலான் ஸ்டீபன்ஸ்(30வயது, 36வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் அசரென்கா ஒரு மணி 42நிமிடங்கள் விளையாடி 6-4, 6-3 என நேர் செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். தொடர்ந்து நடந்த 2வது சுற்று ஆட்டங்களில் சீனாவின் சியூ வாங்(22வயது, 75வது ரேங்க்), 6-4, 7-5 என்ற நேர் செட்களில் ருமேனியாவின் ஐரினா கமிலாவையும்(32வயது, 27வது ரேங்க்), ரஷ்யாவின் வெரோனிகா (26வயது, 5வது ரேங்க்) 2-0 எனற நேர் செட்களில் ஸ்பெயினின் நுரியா டியாசையும்( 31வயது, 80வது ரேங்க்) வென்று 3வது சுற்றில் விளையாட உள்ளனர்.
The post இத்தாலி ஓபன் டென்னிஸ் கரோலினாவை வென்ற அன்னா appeared first on Dinakaran.