டெல் அவில் நகரத்தில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான இஸ்ரேல் மக்கள் முக்கிய சாலைகளை மறித்து போராட்டம் நடத்தினர். ஹமாஸ் படையினர் பிடித்து சென்ற இஸ்ரேல் பிணை கைதிகளை பிரதமர் நெதன்யாகு கைவிட்டு விட்டதாக கூறி அவர்கள் கோசம் எழுப்பினர். நெடுஞ்சாலைகளில் டயர் உள்ளிட்ட பொருட்களை எரித்து ஆத்திரத்தை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள் பதாகைகள், கொடிகளை ஏந்தியவாறு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
பேரணியை இஸ்ரேல் காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்ட போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்ததால் பதற்றம் பன்மடங்கு அதிகரித்தது. கூட்டத்தினர் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டதால் அப்பகுதியே போர்க்களம் போல் மாறியது. சிதறி ஓடிய போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்து இழுத்து சென்றனர். இதனிடையே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாக்கு எதிரான போராட்டம் தொடரும் என பல்வேறு அமைப்புகளை அறிவித்துள்ளதால் டெல் அவில் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.
The post இஸ்ரேல் பிணைக் கைதிகள் 6 பேர் காசாவில் கொடூரக் கொலை: கடும் எதிர்ப்புத் தெரிவித்து இஸ்ரேல் முழுவதும் மக்கள் போராட்டம்! appeared first on Dinakaran.