வரத்து அதிகரிப்பு காரணமாக தக்காளி விலை மேலும் ரூ.10 சரிவு

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று காலை 38 வாகனங்களில் 850 டன் தக்காளிகள் வந்து குவிந்துள்ளது. இதன்காரணமாக, ஒரு கிலோ முதல் தரம் தக்காளி ரூ.50, 2ம் தரம் தக்காளி ரூ.40, ஒரு கிலோ பொடி தக்காளி ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து சில்லரை வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டில் குறைந்த விலையில் தக்காளிகளை வாங்கிச் சென்று ஒரு கிலோ தக்காளி ரூ.90 க்கு விற்பனை செய்கின்றனர். பொடி தக்காளி ரூ.60க்கு விற்கப்படுவதால், புறநகர் கடைகளில் தக்காளிகளை வாங்குவதை தவிர்த்துவிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் வந்து தக்காளியை வாங்கி செல்கின்றனர். இதன்காரணமாக வழக்கத்தைவிட வியாபாரம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, ‘‘கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளி ஒரு கிலோ ரூ.200க்கு மேல் விற்பனை செய்யப்பட்டுவந்தது. தமிழக அரசின் கடும் முயற்சியால் விலை பாதியாக குறைக்கப்பட்டது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ தக்காளி முதல் தரம் 50க்கும் இரண்டாம் தரம் 40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தக்காளியின் விலை படிப்படியாக குறையும்.’’ என்றார்.

The post வரத்து அதிகரிப்பு காரணமாக தக்காளி விலை மேலும் ரூ.10 சரிவு appeared first on Dinakaran.

Related Stories: