பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டு சிறை தண்டனை : வனத்துறை எச்சரிக்கை

பழநி : பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்குமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய வனப்பரப்பைக் கொண்டது பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனச்சரகங்கள். இந்த வனச்சரகங்களில் வரிப்புலி, சிறுத்தை, யானை, மான், கேளையாடு, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி போன்ற விலங்கினங்களும், அரியவகை மூலிகைகள் மற்றும் பறவைகள் அதிகளவில் உள்ளன.

இந்நிலையில் பாலாறு அணைப்பகுதி, கலிக்கநாயக்கன்பட்டி குளம், கோதைமங்கலம் குளம் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பிற மாநிலங்களில் இருந்து இந்த வனச்சரகங்களுக்கு வந்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு, ஏராளமான பறவை இனங்கள் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பறவைகளை பாதுகாப்பது மனிதனின் கடமை. பறவைகளை வேட்டையாடுவது தெரியவந்தால் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன்படி 7 வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

The post பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டு சிறை தண்டனை : வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: