ஒருவழிப்பாதை அறிவிக்கப்பட்டாலும், ஒழுகினசேரி, வடசேரி, அசம்பு சாலை, பாலமோர் சாலை, தலைமை தபால் நிலையம் முதல் மணிமேடை, வேப்பமூடு, கோட்டாறு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்படுகிறது. ஆகவே ஆம்புலன்சுகள் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றன. இதுதவிர சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களாலும், பின்னால் வரும் வாகனங்கள் முன்னேறி செல்ல முடியாமல் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால் அவசர பணிக்கு செல்பவர்கள் ெநரிசலில் சிக்கி மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதனை தவிர்க்க மாநகராட்சி சார்பில், அப்போதைய ஆணையர் சரவணக்குமார் பாலமோர் சாலை, ேகாட்டாறு கேப் சாலை மற்றும் கேபி சாலைகளை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக இரு பிள்ளையார் கோயில் நிர்வாகம் சார்பில் மாநகராட்சிக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
பாலமோர் சாலையிலும் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வேப்பமூடு சந்திப்பு பகுதியில் வாடகை கார் நிலையம் இடம் மாற்றப்பட்டது. ஆனால் ஜீவா மணிமண்டபம், அண்ணா பஸ் நிலையம் சுரங்கப்பாதை ஆகிய பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது. இதனால், முன்பு வாடகை கார் நிலையம் இருந்த பகுதியில் தற்ேபாது அந்த பகுதியில் கடைகள் வைத்திருப்பவர்கள் மற்றும் கடைகளுக்கு வருவோர் தங்களது கார்கைள நிறுத்தி செல்கின்றனர்.
இவ்வாறு கார்களை நிறுத்த மற்றும் மீண்டும் கார்களை எடுக்கும்போது, அந்த பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதுபோல், பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பும் கார்களை நிறுத்தி செல்வதால், அங்கு இருச்சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த கார்களை ேவறு இடங்களில் நிறுத்த முடியாத நிலையும் உள்ளது.
அதேபோல் மணிமேடை கிழக்கு மற்றும் மேற்கு சாலை, கோட்டாறு என்று பல பகுதிகளில் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை உள்ளது. தற்போது வேப்பமூடு பூங்காவில், பண்டிகை காலம் நெருங்குவதால், அங்குள்ள பார்க்கிங் வரும் கார்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் பூங்காவின் நடைபாதை மற்றும் இதர பகுதிகளில் கார்களை நிறுத்தி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க அண்ணா பஸ் நிலையத்துடன், அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை இடத்தை மாநகராட்சி மீட்டு, அங்கு பஸ் நிலைய விரிவாக்கம் மற்றும் மாடி அமைத்து கார் பார்க்கிங் அமைக்க நுகர்வோர் மையம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறது. இதனை ஏற்கனவே மாநகராட்சி சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதுபோல் வடசேரி பஸ் நிலையத்தில் கிழக்கே காலியாக இருக்கும் மனையில், மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கவும் அப்போதைய ஆணயைர் சரவணக்குமார் ஆய்வு செய்திருந்தார். இந்தநிலையில், மாநகராட்சி மேயராக பதவியேற்ற மகேசும், அண்ணா பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து கார் பார்க்கிங் அமைக்கவும், வடசேரியில் கார்பார்க்கிங் பஸ் நிலைய விரிவாக்கம் செய்யவும் ஆய்வு செய்தார்.
இதுதவிர நீதிமன்ற சாலை, பாலமோர் சாலை, மீனாட்சிபுரம் உள்பட 10 இடங்களில் பெரு நகரங்கள் மற்றும் பெரு வணிக வளாகங்களில் உள்ளது போன்று மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி மீனாட்சிபுரம் உள்பட மாநகரின் 10 இடங்களில் மல்டி லெவல் கார் பாரக்கிங் அமைக்க மேயர் மகேஷ் மாநகராட்சி சார்பில், அரசு அனுமதிக்கு பரிந்துரை செய்து இருக்கிறார். அவ்வாறு கார் பார்க்கிங் அமையும், போது, வாகனங்கள் நிறுத்த பொதுமக்கள் திணறும் நிலை தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post நாகர்கோவில் மாநகர பகுதியில் 10 இடங்களில் மல்டி லெவல் கார் பார்க்கிங் appeared first on Dinakaran.