12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. துணை முதலமைச்சர் உதயநிதியின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்!!

சென்னை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அமைச்சரவை சமீபத்தில் மாற்றப்பட்டது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் சில புதிய அமைச்சர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி உயர் கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர் கல்வித்துறை செயலாளராக கோபால் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் விலங்குகள், கால்நடை மற்றும் மீன்வளத் துறைச் செயலராக இருந்தவர்.

அதேபோல தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அதிகாரியாக உள்ள சத்யப்பிரத சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பாக கால்நடைத்துறை, பால்வளம், மீன்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கைத்தறித்துறை செயலாளராக அமுதவள்ளி நியமிக்கப்பட்டுள்ளார்

தொடர்ந்து மின்வாரியத் துறை செயலராக இருந்த ராஜேஷ் லக்கானி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மின்வாரிய தலைவராக கே.நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

*வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் சுந்தரவல்லி கல்லூரி கல்வித்துறை ஆணையராக நியமனம்.

*பொதுத்துறை இணை செயலாளர் விஷ்ணு சந்திரன், வேலைவாய்ப்பு துறை இயக்குனராக நியமனம்.

*சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையர் லலிதா, ஜவுளித்துறை இயக்குனராக நியமனம்.

*திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் பொதுத்துறை துணை செயலாளர் ஆக நியமனம்.

*கைத்தறி துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழக சிறு தொழில் வளர்ச்சி கழக தலைவராக நியமனம்

*தமிழக சிறுதொழில் வளர்ச்சி கழக தலைவர் ஸ்வர்னா, ரூசா திட்ட மாநில இயக்குனராக நியமனம்

*நிதித்துறை இணை செயலாளர் பிரதீவ் ராஜ், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக நியமனம்

*தமிழக நீர்நிலை மேம்பாட்டு திட்ட நிர்வாக இயக்குனராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. துணை முதலமைச்சர் உதயநிதியின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்!! appeared first on Dinakaran.

Related Stories: