அரசியல்வாதி போல் செயல்படுகிறார் ஆளுநர் ரவி, மேலும் ஆளுநரின் கதாகாலட்சேபம் தமிழ்நாட்டில் எடுபடாது என்றும் ஒன்றிய, மாநில அரசுகளின் உறவுகளை துண்டிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கமலாலயத்துக்குப் போட்டியாக ஒரு இடம் உள்ளது என்றால் அது ராஜ்பவன்தான்; ராஜ்பவனை அரசியல்பவனாக மாற்றிக் கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என் ரவி. மேலும் தான் ஆளுநர் என்பதை மறந்துவிட்டு அரசியல்வாதி போல் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தூதுவர் போலவும், நீட் தேர்வுக்கு ஒரு பி.ஆர்.ஒ. போல ஆளுநர் செயல்படுவதாகவும் அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுவிலக்கை அமல்படுத்துவது ஒன்றிய அரசின் கையில்தான் உள்ளது; மாநில அரசால் அதனை செயல்படுத்த முடியாது என்றும் கூறினார். மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்
The post அரசியல்வாதி போல் செயல்படுகிறார் ஆளுநர் ரவி : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.