ஐநாவில் இந்தியா தகவல் பேரிடர் இழப்புகளை குறைக்க முக்கியத்துவம்

ஐ.நா.சபை: நிலச்சரிவு, வெள்ளம், நிலநடுக்கம், வெப்ப அலைகள் உள்ளிட்ட அனைத்து பேரிடர் ஆபத்துகளால் ஏற்படும் இழப்புகளை குறைக்க திட்டங்களை உருவாக்கி வருவதாக ஐநா பொதுச் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. பேரிடர் அபாயக் குறைப்புக்கான செண்டாய் கட்டமைப்பின் (2015-2030) இடைக்கால மதிப்பாய்வு கூட்டம் ஐநா பொதுச்சபையில் நடந்தது. இதில், பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா பங்கேற்று, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

அவர் பேசுகையில், ‘‘இந்தியா தலைமையின் கீழ் ஜி20 உறுப்பு நாடுகள் பேரிடர் அபாயத்தை குறைப்பதற்கான குழு ஒன்றை அமைக்க ஒப்புக் கொண்டுள்ளன. இந்தியாவில் பேரிடர் அபாயத்தை குறைப்பது பொது கொள்கையாக கருதப்படுகிறது. இப்பிரச்னைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பேரிடர் அபாயத்தை குறைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை இந்தியா கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் புயலால் ஏற்படும் உயிரிழப்பு 2 சதவீதத்திற்கு கீழ் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பேரிடர்களின் இழப்புகளை குறைக்க தணிப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

The post ஐநாவில் இந்தியா தகவல் பேரிடர் இழப்புகளை குறைக்க முக்கியத்துவம் appeared first on Dinakaran.

Related Stories: