ஹோண்டுராஸ் சிறை கலவரத்தில் 41 பெண் கைதிகள் பலி; சிறைச்சாலைக்கு வெளியே கதறும் உறவினர்கள்..!!

ஹோண்டூராஸ் நாட்டில் பெண்கள் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 41 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் தலைநகர் டெகுசிகல்பாவிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெண்கள் சிறையில் 900 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறையில் இரு கும்பல்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில், சிறையின் ஒரு பகுதியில் தீ விபத்தும் ஏற்பட்டது. தீயில் சிக்கியும், மோதலில் காயமடைந்த 41 பேர் பலியாகினர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறையில் இருக்கும் மற்ற கைதிகளின் நிலையை அறிய சிறைச்சாலைக்கு வெளியே அவர்களது உறவினர்கள் குவிந்தனர்.

The post ஹோண்டுராஸ் சிறை கலவரத்தில் 41 பெண் கைதிகள் பலி; சிறைச்சாலைக்கு வெளியே கதறும் உறவினர்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: