எச்ஐவி தொற்று குறித்து கிராமிய கலைஞர்கள் விழுப்புணர்வு

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தனி பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, ரியல் அறக்கட்டளை இணைந்து எச்ஐவி பால்வினை தொற்று குறித்து கிராமிய கலைஞர்கள் வரிஸ் கலைக்குழு மூலமாக நேற்று பொதுமக்கள், பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ரியல் அறக்கட்டளை திட்ட மேலாளர் ரம்ஜான் மற்றும் களப்பணியாளர்கள் அசோக், ராஜலட்சுமி, முரளி, ஜெயகுமார், திருத்தணி அரசு மருத்துவமனை ஆய்வக நுட்புனர் பத்மாவதி, சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், இந்திய சமுதாய நல நிறுவனத்தின் மாவட்ட வள மேலாளர் செந்தில்குமார், மேற்பார்வையாளர் ஏழுமலை, சிஎச்ஏடிவிடி களப்பணியாளர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

The post எச்ஐவி தொற்று குறித்து கிராமிய கலைஞர்கள் விழுப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: