மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாக மாற்ற ரயில்வேயில் செய்யப்படும் சிறப்பு வசதிகள் வெளியீடு: ஜன. 29 வரை கருத்து தெரிவிக்கலாம்

புதுடெல்லி: ரயில் நிலையங்கள், அங்குள்ள வசதிகள், ரயில்களில் உள்ள வசதிகள் ஆகியவை மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை, பரிந்துரைகளை, ஆலோசனைகளை வரும் ஜனவரி 29ம் தேதி வரை தெரிவிக்கலாம் என ஒன்றிய அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தெரிவித்துள்ளது.ரயில் நிலைய நுழைவாயில், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளில் அவர்கள் சிரமமின்றி ஏறுவதற்கான வசதி, ஒளியூட்டப்பட்ட பெயர் பலகைகள், பிரெய்லி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பெயர் பலகைகள், ரயில் பெட்டிகளிலும் பிரெய்லி எழுத்து பெயர் பலகைகள், பிரத்யேக உதவி மையங்கள், உயரம் குறைந்த டிக்கெட் கவுன்டர்கள் உள்ளிட்ட வசதிகள் வரைவு வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாக மாற்ற ரயில்வேயில் செய்யப்படும் சிறப்பு வசதிகள் வெளியீடு: ஜன. 29 வரை கருத்து தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: