தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் அனைத்து பல்கலை.களுக்கும் கூடுதல் நிதி வழங்க வேண்டும்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: மே மாத ஊதியத்திற்கும், பிற செலவுகளுக்கும் சென்னை பல்கலைக்கழகத்திற்கு ரூ.18.61 கோடி தேவைப்பட்ட நிலையில், பல்கலைக்கழகத்திடம் ரூ.5 கோடி மட்டுமே இருப்பில் இருந்தது. மேலும், ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட தவிர்க்க முடியாத செலவுகளை செய்வதற்கு கூட, குறைந்தபட்சம் ரூ.11.50 கோடி தேவைப்பட்டது. நிலைமையை சமாளிக்க ஓய்வூதிய நிதியம், அறக்கட்டளை நிதியம் ஆகியவற்றில் இருந்த ரூ.7.6 கோடியை பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்து பயன்படுத்தியுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு இதை தவிர வேறு வழியில்லை. சென்னை பல்கலைக்கழகத்தில் மட்டும் இந்த நிலை என்று கூற முடியாது. தமிழகத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. எனவே, சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட மாநில அரசின் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கையாக அனைத்துப் பல்கலை.களுக்கும், அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

The post தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் அனைத்து பல்கலை.களுக்கும் கூடுதல் நிதி வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: