இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன்,கே.சுரேந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தனிநீதிபதி 14 டீன் நியமன உத்தரவை ரத்து செய்தது சரியே என்று எதிர் மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் ஐசக் மோகன்லால் வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருத்துவ கல்லூரி முதல்வர்களாக பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக ஆட்சேபனைதெரிவிக்க 2 மாதங்கள் அவகாசம் வழங்கிய நிலையில், 2 நாளில் நியமன உத்தரவு பிறப்பித்ததை ஏற்க முடியாது. தனி நீதிபதி உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை. மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு 4 வாரங்களில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர் பதவி உயர்வுக்கான பட்டியலை தயாரித்து நியமனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
The post அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான முதல்வர் பதவி பதவி உயர்வு பட்டியலை தயாரித்து 4 வாரங்களில் நியமிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
