காஜா ரெசிபி

தேவையான பொருட்கள்

300 gms மைதா
15 gms பேக்கிங் சோடா
45 மில்லி லிட்டர் நெய்
45 மில்லி லிட்டர் பால்
தேவைக்கேற்ப உப்பு
தேவைக்கேற்ப தண்ணீர் எண்ணெய்
500 மில்லி லிட்டர் சுகர் சிரப்

செய்முறை:

மைதா, பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மென்மையாக வரும் வரை அதில் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும். இதனை மூடி வைத்து 10 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். நன்கு தேய்த்து உருட்டி 12 சின்ன துண்டுகளாக உருட்டி கொள்ளவும். பின் ஒவ்வொரு உருண்டையையும் மூன்று பங்காக உருட்டவும். பூரி போல் தேய்த்து ஒன்றன் மேல் ஒன்று வைத்து அதில் நெய் தடவவும். அதனை ரோல் செய்து இரண்டு பாதியாக வெட்டி மீண்டும் தேய்த்து கொள்ளவும். பின் அதனை பொன்னிறமாக வரும் வரை எண்ணெயில் போட்டு வறுத்து கொள்ளவும். பொரித்த மடாட்டாவின் மீது சுகர் சிரப்பில் முக்கி எடுத்து அதன் மேல் ஏலக்காய் பொடி தூவவும். சுகர் சிரப்பில் இருந்து வெளியே எடுத்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து தேவைப்படும்போது எடுத்து சாப்பிடலாம்.

The post காஜா ரெசிபி appeared first on Dinakaran.