பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அல்கராஸ், முச்சோவா 4வது சுற்றுக்கு தகுதி

பாரீஸ்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3வது சுற்று போட்டியில், செக்குடியரசின் கரோலினா முச்சோவா, ருமேனியாவின் இரினா கேமிலியா பேகுவுடன் மோதினார். இதில் முச்சோவா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்குள் நுழைந்தார். ரஷ்யாவின் எலினா அவனேசியன் 3-6,6-1, 7-5 என்ற செட் கணக்கில், டென்மார்க்கின் கிளாரா டாசனை வென்றார்.

அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-3, 3-6,6-2 என கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவாவை வீழ்த்தினார். உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, 2ம் நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா ஆகியோரும் கால்இறுதிக்கு முந்தைய 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஆடவர் ஒற்றையர் 3வது சுற்றில் , நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 6-1,6-4,6-2 என கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ்வை வீழ்த்தினார். கிரீசின் சிட்சிபாஸ் 6-2,6-2,6-3 என அர்ஜென்டினாவின் டியாகோவையும், செர்பியாவின் ஜோகோவிச் 7-6,7-6,6-2 என ஸ்பெயினின் டேவிடோவிச் ஃபோகினாவையும் வீழ்த்தி 4வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அல்கராஸ், முச்சோவா 4வது சுற்றுக்கு தகுதி appeared first on Dinakaran.

Related Stories: