சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் 100வது பிறந்த நாள்

புதுடெல்லி: மறைந்த சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் 100வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி உலக தலைவர்கள் பலரும் அவரை நினைவு கூர்ந்தனர். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில்,‘‘மறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் 100வது பிறந்த நாளில் அவருக்கு எனது அஞ்சலி செலுத்துகிறேன். சிங்கப்பூரின் மாற்றத்தில் அவரது தொலைநோக்கு தலைமை முக்கிய பங்கு வகித்தது. அவரது தொலைநோக்கு பார்வை மற்றும் இடைவிடாத ஆர்வம் ஆகியவை அவரது தனிப்பட்ட மகத்துவத்துக்கு சான்றாகும். அவரது பணி உலகளாவிய தலைவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

The post சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் 100வது பிறந்த நாள் appeared first on Dinakaran.

Related Stories: