குஜராத்தில் கூரியர் பார்சல்களில் ரூ.1.12 கோடி கஞ்சா பறிமுதல்

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் கூரியர் பார்சல்களில் இருந்து ரூ.1.12 கோடி மதிப்பிலான கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், “மதிய உணவு பெட்டிகள், பொம்மைகள், குழந்தை பராமரிப்பு பொருள்கள், உடைகள், ஹெட்ஃபோன், ஏர் ப்யூரிபையர்ஸ் உள்பட பல்வேறு பொருள்களுக்குள் போதைப்பொருள்களை மறைத்து வைக்கப்படுகின்றன. இவை டார்க்வெப் மற்றும் பிற சமூக ஊடகங்களை பயன்படுத்தி கூரியர் மூலம் போதைப்பொருள்கள் கடத்தப்படுகின்றன. அகமதாபாத் குற்றப்பிரிவு மற்றும் சுங்கத்துறையின் கூட்டு நடவடிக்கையில், 3.75 கிலோ எடையுள்ள உயர்தர செயற்கை மற்றும் கலப்பின கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரியர் பார்சல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் இவற்றின் மதிப்பு ரூ.1.12 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குஜராத்தில் கூரியர் பார்சல்களில் ரூ.1.12 கோடி கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: