டெல்லியில் வெள்ளப்பெருக்கு; களத்தில் இறங்கியது ராணுவம்

புதுடெல்லி: டெல்லியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணிக்காக இந்திய ராணுவம் களத்தில் இறங்கியது. துணைநிலை ஆளுநர் நேற்றிரவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினார். வடமாநிலங்களில் பெய்த கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தலைநகர் டெல்லியில், யமுனை ஆற்றில் வெள்ளம் அபாய எல்லையை தாண்டி ஓடுவதால், கரையோர பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது யமுனையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று இரவு 11 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 207.98 மீட்டராக இருந்தது.

ராஜ்காட் அருகே தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஐ.டி.ஓ., சாந்திவன் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதால், மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘குடிநீர் ரெகுலேட்டரின் பழுதுபார்க்கும் பணியை ராணுவம் மேற்கொண்டுள்ளது. அவர்களின் அயராத முயற்சி மற்றும் கடின உழைப்பால், உலக சுகாதார நிறுவன கட்டிடத்தின் முன் உள்ள யமுனை ஆற்றின் கரையை சரிசெய்து, ஐ.டி.ஓ தடுப்பணையில் உள்ள வண்டல் ஜாம் வாயிலை திறக்க முடிந்தது.

ஒரு டஜனுக்கும் மேற்பட்ட என்.டி.ஆர்.எப் குழுக்களைத் தவிர, ராணுவத்தின் கார்ப்ஸ் ஆப் இன்ஜினியர்ஸின் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் பழுதான வடிகால் ரெகுலேட்டருக்கு அருகிலுள்ள கரையை சரிசெய்து வருகின்றனர்’ என்றார்.

The post டெல்லியில் வெள்ளப்பெருக்கு; களத்தில் இறங்கியது ராணுவம் appeared first on Dinakaran.

Related Stories: