3 மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து கள ஆய்வு: இன்று விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் செல்கிறார், அங்கு 3 மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கள ஆய்வு செய்யவிருக்கிறார். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்தோரும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.

இன்று நாளையும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு விழுப்புரம் செல்வவிருக்கிறார். மாலை 4.30 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் விவாசியிகள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்து உரையாடுகிறார்.

இதை தொடர்ந்து 3 மாவட்ட சிறு, குறு தொழில் முனைவோருடன் பேசுகிறார் இரவு 7 மணிக்கு விழுப்புரம் சரகு போலீஸ் ஜி.ஐ.ஜி மற்றும் மூன்று மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருடன் சட்டஒழுங்கு நீலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

நாளை காலை 10 மணிக்கு விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று மாவட்ட அரசு துறை அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிவதோடு பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்க விருக்கிறார்.

The post 3 மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து கள ஆய்வு: இன்று விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: