திரையங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலத்தில் உள்ளது போல வசூலிக்க அனுமதிக்க வேண்டும்: திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் தற்போது ஏறக்குறைய ஆயிரம் திரையரங்குகள் இயங்கி வருகின்றன. 2000-ஆண்டு துவக்கத்திலிருந்தே ஃபில்ம் ரோல்கள் மூலம் திரையிடக்கூடிய பழைய புரொஜெக்டர்களுக்குப் பதிலாக டிஜிட்டல் முறையில் படங்களை ஹார்ட் டிஸ்க்கிலிருந்து திரையிடும் புரொஜெக்டர்கள் அறிமுகமாகின.

க்யூப், யு.எஃப்.ஓ போன்ற நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்துடன்கூடிய புரொஜெக்டர்களை திரையரங்குகளில் நிறுவின. தற்போது தமிழகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய திரையரங்குகளைத் தவிர, பிற திரையரங்குகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில்தான் படங்களைத் திரையிட்டு வருகின்றன. இந்தியாவில் இருந்து வந்த தமிழ் திரைப்படங்கள் சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, ஜப்பான், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஓசியானியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற பிற நாடுகளில் திரையிடுவதன் மூலம் உலகதிரைப்பட துறையில் தனக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

திரையரங்குகளில் திரையிட தயாரிக்கப்பட்ட படங்களை OTT-ல் திரையிடும்போது, அதில் வரும் வருமானத்தில் ஒரு பங்கு திரையரங்குகளுக்கு அளிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய திரைப்படங்கள் வெளி வந்து 8 வாரம் கழித்து தான் O.T.T.யில் திரையிட வேண்டும். OTT-யில் புதிய திரைப்படங்கள் 4 வாரங்கள் கழித்த பிறகு தான் விளம்பரம் செய்ய வேண்டும். விளம்பர போஸ்டர்ஸ்களுக்கு 1% சதவிகிதம் (பப்ளிசிட்டி) நீக்க வேண்டும். ஐபிஎல், உலகக்கோப்பை, அழகி போட்டி போன்றவற்றையும் திரையரங்கில் ஒளிபரப்ப அனுமதி வேண்டும். புதிய திரைப்படங்களுக்கு அதிகபட்சமாக 60% சதவிகிதம் தான் பங்குத்தொகையாக கேட்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

* தமிழ்நாடு அரசிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

திரையங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலத்தில் உள்ளது போல வசூலிக்க அனுமதிக்க வேண்டும். திரையரங்குகள் வர்த்தக சம்மந்தமான நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். மின்சாரக் கட்டணங்கள், சொத்து வரி ஆகியவைகள் திரையரங்குகளுக்கு குறைத்து வசூலிக்க ஆவண செய்ய வேண்டும். ஏற்கனவே நாம் கொடுத்துள்ள கோரிக்கைகளை அரசு மறுபரிசீலனை செய்து விரைவில் அனுமதி அளித்து திரையரங்குகளை வாழ வழி செய்ய அரசை வேண்டுகிறோம் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

The post திரையங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலத்தில் உள்ளது போல வசூலிக்க அனுமதிக்க வேண்டும்: திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: