தன்னைத்தானே தூய்மைப்படுத்திக்கொள்ளும் நோன்பு என்பது ஓர் உன்னத நன்னெறி அல்லவா: பிரதமர் மோடி, கவிஞர் வைரமுத்து ரமலான் வாழ்த்து!

டெல்லி : ரமலான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஈத்-உல்-பித்ர் நல்வாழ்த்துக்கள். நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் கருணை உணர்வு மேலும் வளரட்டும். அனைவரின் அற்புதமான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். ரமலான் வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார். ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து செய்தியில், “இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஒரு மாத நோன்பை கடைப்பிடித்து, இல்லாதோருக்கு ஈகை அளித்து சகோதரத்துவத்தை முன்னிறுத்தும் ரமலான் பண்டிகையை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ஈகைத்திருநாளாம் ரமலான் திருநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“மனம் உடல் வாக்கு
மூன்றையும் நெறிப்படுத்தி
உணவு பானம் இச்சை
மூன்றையும் புறப்படுத்தி
ஒரு மனிதன் தன்னைத்தானே
தூய்மைப் படுத்திக்கொள்ளும்
நோன்பு என்பது
ஓர் உன்னத நன்னெறி அல்லவா!

அந்த நெறியை
நழுவாமலும் வழுவாமலும்
கடைப்பிடிக்கும்
உலக இஸ்லாமிய சமூகத்துக்கு
என் ரமலான் வாழ்த்துக்கள்”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தன்னைத்தானே தூய்மைப்படுத்திக்கொள்ளும் நோன்பு என்பது ஓர் உன்னத நன்னெறி அல்லவா: பிரதமர் மோடி, கவிஞர் வைரமுத்து ரமலான் வாழ்த்து! appeared first on Dinakaran.

Related Stories: