ஹஜ் பயணிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 23ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய ஹஜ் குழுவானது, புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியை வரும் 23ம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக அல்லது ஐபோன், ஆண்ட்ராய்டு கைபேசியில் ‘HAJ SUVIDHA’ செயலியினை பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

இதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் 23.9.2024 அன்று அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்டு குறைந்தது 15.1.2026 வரையில் செல்லத்தக்க இயந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குழு தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது IFSC குறியீட்டுடன் கூடிய சேமிப்பு வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரி சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post ஹஜ் பயணிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: