கை, கால் ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு துறைத்தேர்வில் விலக்கு: முதல்வருக்கு மாற்றுதிறனாளிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: கை, கால் ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு துறைத்தேர்வில் விலக்களிக்க வேண்டும் என்று முதல்வருக்கு மாற்று திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவரும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் ரெ.தங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மானியகோரிக்கையில் நிறைவேற்றி தந்தார்.

அதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால், அரசுதுறையில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளான செவித்திறன் குறைபாடு, கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே டிஎன்பிஎஸ்சி துறை தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் கை, கால் அங்க குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு துறை தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்கபடவில்லை என மனவேதனையில் உள்ளனர்.

கை, கால் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் டிஎன்பிஎஸ்சி துறை தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் மூலமாக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுபட்ட பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் கை, கால்களை இழந்த அங்க குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கும் துறைத்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அரசாணை பிறப்பிப்பார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கை, கால் ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு துறைத்தேர்வில் விலக்கு: முதல்வருக்கு மாற்றுதிறனாளிகள் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: