முகப்பேர் குடிநீர் வாரிய ஆபீசில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு: மக்கள் கடும் திணறல்

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் ஸ்கூல் சாலையில் குடிநீர்வாரியம் 7வது மண்டல அலுவலகம் உள்ளது. முகப்பேர், திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் குடிநீர் பிரச்னை சம்பந்தமாக அலுவலகத்தில் புகார் கொடுக்கவும் வீடுகளுக்கு புதியதாக குடிநீர் இணைப்பு கேட்டும் மனு கொடுக்க வருகின்றனர். கடந்த சில மாதங்களாக 7வது மண்டல குடிநீர்வாரியம் அலுவலகத்தை மறைத்து ஏராளமான தனியார் டிராவல்ஸ் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதன்காரணமாக குடிநீர்வாரிய அலுவலகம் எங்கு உள்ளது என்று தெரியமால் புதிதாக வருகின்றவர்கள் தவிக்கின்றனர். மேலும் அவர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமின்றி தவிக்கின்றனர். இதனால் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று குடிநீர் வாரிய சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆக்கிரமிப்பு அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து சமூகநல ஆர்வலர்கள் கூறுகையில்,’’முகப்பேரில் உள்ள குடிநீர் வாரிய 7வது மண்டல அலுவலகம் முன் தனியார் டிராவல்ஸ் வேன்கள் வரிசையாக நிற்பதால் குடிநீர் வாரிய அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வரும் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதுகுறித்து குடிநீர் வாரிய அலுவலகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், இதுவரை குடிநீர் வாரிய அலுவலகத்தின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு வேன்கள் அப்புறப்படுத்தவில்லை. எனவே ஆக்கிரமித்துள்ள வேன்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

 

The post முகப்பேர் குடிநீர் வாரிய ஆபீசில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு: மக்கள் கடும் திணறல் appeared first on Dinakaran.

Related Stories: