தேர்தல் வந்தால் தமிழர்கள் மீது திடீர் பாசம்; நடிகர் திலகத்தையும் மிஞ்சி மோடி நடிக்கிறார்.! சீமான் டார்…டார்…

மதுரை, கோ.புதூர் பஸ் ஸ்டாண்டில் நாம் தமிழர் கட்சி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: தேர்தல் வந்தால் மட்டும் மோடிக்கு திடீர் தமிழ் பற்று வந்துவிடும். நான் தமிழை பற்றி பேசுவதை எல்லாம், உலக நாடுகளில் மோடி பேசி வருவார். தமிழ் மொழி பேசும் மோடியால் நாடாளுமன்றத்தில் தமிழ் பேச முடியுமா? அதற்கான அங்கீகாரம் வழங்க முடியுமா? ஆட்சி மொழியாக தமிழை வர வைக்க முடியுமா? புதிதாக திறக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தில் சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம், இருக்கிறது. தமிழ் மொழிக்கு ஏன் கல்வெட்டு வைக்கவில்லை.

பதில் இல்லை. நடிகர் திலகத்தையும் தாண்டி மோடி நடிக்கிறார். ஏமாந்து விடுவோம் என தப்பு கணக்கு போட்டு மக்களை ஏமாற்ற பார்க்கிறார். மோடி திடீரென கச்சத்தீவை பற்றி பேசுவது, ‘என்ன காந்தி இறந்து விட்டாரா?’ என்று கேட்பது போல உள்ளது. ஆழ்ந்து சிந்தியுங்கள். இப்போது தான் கனவில் இருந்து விழித்துள்ளனர். கனவில் இருந்து எழுந்து வந்தது போல் திடீரென கச்சத்தீவை பற்றி பேசுகிறார். தேர்தல் வந்துவிட்டால் கச்சத்தீவு, தமிழக மீனவர்கள் நலன் போன்றவற்றை பற்றி பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த 1976ல் கொடுக்கப்பட்ட கச்சத்தீவை பற்றி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக அண்ணாமலை எடுத்துக் கொடுத்ததாக மோடி கூறுகிறார்.

அதுவரையும் மோடி எங்கே போய் படுத்தாராம். பதில் இல்லை. மேகதாது அணைக்கும், ஈழப்படுகொலைக்கும், குஜராத் கலவரத்திற்கும், மணிப்பூர் கலவரத்திற்கும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் எடுத்து தரச்சொல்லுங்கள். பாஜவிடம் நாடும் மக்களும் சிக்கிக்கொண்டிருப்பதை ஒவ்வொரு இந்தியனும் கொதித்து போயிருக்கின்றனர். நாங்களும் கொதித்து போயிருக்கிறோம். குஜராத் கலவரம், மணிப்பூர் கலவரத்தை நாங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் எடுத்து பார்த்தோம். உண்மையிலேயே ஒவ்வொருவரும் கொதித்து போயிருக்கிறோம். இத்தனை ஆண்டு காலத்திற்கு பிறகு கச்சத்தீவை பற்றி பேசுகின்றனர். 840 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அப்போது வராத பற்று தேர்தல் நேரத்தில் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தேர்தல் வந்தால் தமிழர்கள் மீது திடீர் பாசம்; நடிகர் திலகத்தையும் மிஞ்சி மோடி நடிக்கிறார்.! சீமான் டார்…டார்… appeared first on Dinakaran.

Related Stories: