3 போட்டியில் வென்றாலும் மற்ற அணிகளின் வெற்றிதோல்வியை பொறுத்தே வாய்ப்பு கிடைக்கும். பேட்டிங்கில் ரகானே, ரஸ்சல், ரகுவன்ஷியை தவிர யாரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. பவுலிங்கும் எதிர்பார்த்தபடி அமைய வில்லை.மறுபுறம் சிஎஸ்கே 11 ஆட்டங்களில் 2 வெற்றி, 9 தோல்வி என 4 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 3 போட்டியிலும் வெற்றிபெற்று ஆறுதலுடன் தொடரை முடிக்கும் முனைப்பில் உள்ளது.
பேட்டிங்கில் ஆயுஷ் மாத்ரே மட்டுமேபுதிய நட்சத்திரமாக ஜொலிக்கிறார். ஜடேஜா கடைசி போட்டியில் சிறப்பாக ஆடியும் ஆர்சிபியுடன் வெற்றிபெறமுடியவில்லை. இன்று சிஎஸ்கே வெற்றிபெற்று கேகேஆரையும் தன்னுடன் வெளியே அழைத்துச்செல்ல போராடும்.
The post ஈடன் கார்டனில் இன்று மோதல்: கேகேஆரின் பிளேஆப் வாய்ப்பை தடுக்குமா சிஎஸ்கே? appeared first on Dinakaran.
