இதனிடையே அமெரிக்காவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்யும் எம்கியூ-9பி டிரோன்களின் விலையானது மற்ற நாடுகளுக்கு வழங்கப்பட்ட விலையைக்காட்டிலும் 27 சதவீதம் குறைவாக இருக்கும் என்று பாதுகாப்பு துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 15ம் தேதி நடந்த பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் 31 எம்கியூ-9பி டிரோன்களை வாங்குவதற்கு ஒப்புதல் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. விலை நிர்ணயம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
The post அமெரிக்காவிடம் டிரோன் கொள்முதல் இந்தியாவிற்கு 27 சதவீதம் விலை குறைவு? appeared first on Dinakaran.