புவி,சுந்தர் அசத்தல் பந்துவீச்சு வீண் போராடி வென்றது டெல்லி

ஐதராபாத்:சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில்,டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது.ராஜிவ் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில்,டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட் செய்தது.தொடக்க வீரர்களாக வார்னர்,பில் சால்ட் களமிறங்கினர்.புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரில் சால்ட் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார்.அடுத்து வார்னருடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார்.ஜான்சென் வீசிய 2வது ஓவரில் மார்ஷ் 4 பவுண்டரிகளை விளாசி மிரட்டினார்.அவர் 25 ரன் எடுத்து (15 பந்து,5 பவுண்டரி)நடராஜன் வேகத்தில் ஆட்டமிழந்தார்.சுந்தர் வீசிய 8வது ஓவரில் வார்னர் (21 ரன்,20 பந்து,2 பவுண்டரி,1 சிக்சர்),சர்பராஸ் கான் (10 ரன்),ஹகிம் கான் (4 ரன்)ஆகியோர் விக்கெட்டை பறிகொடுக்கடெல்லி 62 ரன்னுக்கு 5விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில் மணிஷ் பாண்டே -அக்சர் படேல் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடியது இருவரும் 6வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 69 ரன் சேர்த்தனர்.மார்கண்டே வீசிய 17வது ஓவரில் அக்சர் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அசத்தினார்.அக்சர் 34 ரன் எடுத்து (34 பந்து,4பவுண்டரி) புவனேஷ்வர் வேகத்தில் கிளீன் போல்டாக,மணிஷ் 34 ரன் எடுத்து ரன் அவுட்டானார்.அடுத்து வந்த அன்ரிச் (2 ரன்), ரிபல் படேல் (5 ரன்) ரன் அவுட்டாகினர்.
டெல்லி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்தது குல்தீப் 4 ரன், இஷாந்த் 1ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் புவனேஷ்வர் 4 ஓவரில் 11 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார்.வாஷிங்டன் 3,நடராஜன் 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து 7 ரன் வித்தியாசத்தில் தோற்றது.மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 49 ரன் (39 பந்து,7 பவுண்டரி)விளாசினார் கிளாசன் 31ரன்,வாஷிங்டன் சுந்தர் 24 ரன் எடுத்தனர்.டெல்லி பந்துவீச்சில் நார்ட்ஜ்,அக்சர் பட்டேல் தலா விக்கெட் வீழ்த்தினர்.டெல்லி அணி 2வது வெற்றியை பதிவு செய்து 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

The post புவி,சுந்தர் அசத்தல் பந்துவீச்சு வீண் போராடி வென்றது டெல்லி appeared first on Dinakaran.

Related Stories: