இந்த நிலையில் 2வது நாளாக நடைபெறும் ‘I.N.D.I.A ’ கூட்டணிக்கான இலச்சினை வெளியிடப்பட உள்ளது. மேலும், கூட்டணியின் முக்கிய கட்சிகளைச் சேர்ந்த 11 தலைவர்கள் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட உள்ளது. இதுதவிர, குறைந்தபட்ச பொது திட்டத்தை செயல்படுத்த சில துணை குழுக்கள், தகவல் தொடர்பு குழுக்கள் என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.இதனிடையே I.N.D.I.A ’ கூட்டணிக்கென பொதுவாக ஒரு சமூகவலைதள குழுவை அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த குழு 3வது அமர்வு முடிந்த பின் நாளை தனியாக சந்தித்து ஆலோசிக்க உள்ளது. கூட்டணி தொடர்பான பொதுவான செய்தி, பேஸ்புக், ட்விட்டர் மட்டுமல்லாது வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்கள் வாயிலாக அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள மக்களையும் சென்று அடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி இந்த குழு பயணிக்கும் என தெரிகிறது.
The post டெல்லியில் I.N.D.I.A கூட்டணியின் தலைமையகம் .. செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் தீவிரப்படுத்தவும் திட்டம்!! appeared first on Dinakaran.
