டெல்லியில் 3 நாள் நடக்கும் தலைமை செயலாளர்கள் தேசிய மாநாடு தொடக்கம்: பிரதமர் மோடி பங்கேற்கிறார்

புதுடெல்லி: மாநில தலைமைச் செயலாளர்களின் 3வது தேசிய மாநாடு டெல்லியில் தொடங்கியது. ஒன்றிய, மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் கீழ், மாநில தலைமைச் செயலாளர்கள் மாநாடு கடந்த ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. முதல் மாநாடு 2022 ஜூன் மாதம் தர்மசாலாவிலும், 2வது மாநாடு டெல்லியில் கடந்த ஜனவரியிலும் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 3வது தேசிய மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. 3 நாள் நடக்கும் இம்மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இதில், அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்கள், ஒன்றிய அரசின் பிரதிநிதிகள், மூத்த அதிகாரிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். மாநாட்டில், மக்களுக்கு எளிதான வாழ்க்கையை வழங்குவதில் முக்கிய கவனம் செலுத்தப்படும். இவை தவிர, சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

The post டெல்லியில் 3 நாள் நடக்கும் தலைமை செயலாளர்கள் தேசிய மாநாடு தொடக்கம்: பிரதமர் மோடி பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: